
வா நண்பனே!
வா..! வா..!
புறப்படுவோம் புதிய சொர்க்கம் நோக்கி!
சுயத்தை அலசி...
சோகம்...
சோம்பல் அகற்றி...
வெற்றுச் சுயபரிதாபம்...
வேரோடு களைந்து...
இன்னது... இதுதான் என் தேவை...
எனும் தெளிதல்... புரிதலோடு...
அர்ச்சுனன் கண் பார்த்த...
மீன்... மீனின் தலை...
எனும் தீர்க்க நோக்கோடு...
நமது சொர்க்கத்தின் வரைபடம்...
புகைப்படங்களை...
நொடிக்கொருதரம்...
சரிபார்த்தபடி...
வா நண்பனே!
புறப்படுவோம் புதிய சொர்க்கம் நோக்கி!
வழியில்...
பாம்பு.. வரலாம்...
புலி வரலாம்...
பசப்பவும் சிலபேர் வரலாம்..!
தூவென்று உமிழ்ந்து..
போவென்றப்பால் விரட்டி...
நெஞ்சிலுறுதியுடன்...
நேர்மைத் திறம் கொண்டு...
வா நண்பனே!
வா..! வா..!
புறப்படுவோம் புதிய சொர்க்கம் நோக்கி!
துணிந்து ஒரு அடி...
ஒரே ஒரு அடி...
முன்வைத்து விட்டாயா...?
இனி...
வெற்றி வெகுதூரமில்லை..!
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"
12 comments:
Nalla irundhudhu unga kavithai....Vaazhthukkal!!
:) Attagasam!
and please add few affirmation to ur daily list " I write 100 comment posts"
" I am proud author of best selling book" , " I inspire millions" Good health is my birth right"
வாவ்...கலக்கல்ஸ் கவிதை Antony!
//இன்னது... இதுதான் என் தேவை...
எனும் தெளிதல்... புரிதலோடு...//
எல்லாருக்கும் முக்கியமாக எனக்கு தேவையான தன்னம்பிக்கை வரிகள். ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.
//துணிந்து ஒரு அடி...
ஒரே ஒரு அடி...
முன்வைத்து விட்டாயா...?
இனி...
வெற்றி வெகுதூரமில்லை..!//
நல்ல அழகு... பாராட்டுகள் நண்பரே
OpenID athivas said...
// Nalla irundhudhu unga kavithai....Vaazhthukkal!! //
Thank you very much for your visit & Comment Dear Athivas.
Srivats said...
// :) Attagasam! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!
Srivats said...
// and please add few affirmation to ur daily list " I write 100 comment posts"
" I am proud author of best selling book" , " I inspire millions" Good health is my birth right" //
Ahhh... Really a very inspiring comment Srivats.
Thank you soooooo much.
அன்புடன் அருணா said...
// வாவ்...கலக்கல்ஸ் கவிதை Antony! //
ஐயோவ்....! ரொம்ப நன்றிங்க Aruna Madam...
நியாயமாய் இந்தப் பெருமையெல்லாம் உங்களுக்கே சேரவேண்டியது....!
Kalyani Suresh said...
// எல்லாருக்கும் முக்கியமாக எனக்கு தேவையான தன்னம்பிக்கை வரிகள். ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கல்யாணி!
ஆ.ஞானசேகரன் said...
// நல்ல அழகு... பாராட்டுகள் நண்பரே //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நன்றி..! நன்றி..! நன்றி..!
Post a Comment