ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
-புறநானுறு
GIVE & RECEIVE FULL
Custom Search for Positive Anthony Muthu
Custom Search
Sunday, May 24, 2009
LOA- ன்னா என்னன்னு தெரியுமா பாஸ்?
இப்போ மேலை நாடுகளில் சுய முன்னேற்ற இயக்கங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை... L. O. A. (Law of Attraction.)
அதாவது "ஆகர்ஷண விதி" (நியூட்டனின் 3- ஆம் விதி போல)
நீங்கள் உங்கள் மனதில் எதை திரும்பத் திரும்ப எண்ணுகிறீர்களோ..!
கற்பனை செய்கிறீர்களோ..! காட்சியாக காணுகிறீர்களோ..!
அதை நீங்கள் ஆகர்ஷிக்கிறீர்கள். கவர்ந்திழுக்கிறீர்கள்..!
நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச மகாசக்தி நமது எண்ணக் காட்சிகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது. வரமளிக்கிறது.
இப்போது நாம் இருக்கும் நிலைக்கு நாம் மட்டுமே பொறுப்பு.
இந்த நிலையை நாம்தான் நமது எண்ணங்களால் உருவாக்கினோம்.
துன்பத்திலிருக்கும் ஒரு ஏழையின் மனம், தன் ஏழ்மை போகாதா...? என ஏங்குகிறது. கவனியுங்கள்...! அங்கேயும்... அவன் முதலில் தன் ஏழ்மையைக் குறித்த நினைவை கொண்டு வந்துவிட்டு, பிறகுதான் இது போகாதா..? என எண்ணுகிறான்.
இந்த நிலையில் அவன் மனம் மேலும் ஏழ்மையைத்தான் ஆகர்ஷிக்கும்.
ஒரு பணக்காரனை எடுத்துக் கொள்வோம்.
அவன் தன்னிடமிருக்கும் பணத்தை எப்படிப் பெருக்கலாம், அதை வைத்து என்னென்ன காரியங்கள் (அது நல்லதோ கெட்டதோ..?) செய்யலாம்...? என எண்ணுகிறான். அவன் சிந்தனை முழுவதும் பணம் நிறைந்திருப்பதால், அவன் மேலும் பணத்தையே ஆகர்ஷிக்கிறான்.
மனித மனத்தின் இயற்கை.., தான் இருக்கும் சூழ்நிலையையே அதிகமாக உள்வாங்கிக் கொள்கிறது.
எதை உள்வாங்குகிறதோ... அதையே... திரும்பத் திரும்ப எண்ணுகிறது. ஆகர்ஷிக்கிறது.
இவைதான் ஒரு ஏழை எப்போதுமே ஏழையாக இருப்பதற்கும், பணக்காரன் மேலும் பணக்காரனாகிக் கொண்டே போவதற்கும் அடிப்படை காரணங்கள்.
ஆகவே... வேண்டாத எதிர்மறை எண்ணங்களை முறியடிப்போம்.
இப்போது உங்களுக்கு இப்போது எது தேவையோ அதை மட்டுமே எண்ணுங்கள். மனதில் காட்சியாக காணுங்கள். ஆகர்ஷியுங்கள். கவர்ந்திழுங்கள்.
வெகு விரைவில் அது நிகழும். கிடைக்கும்.
ஆம்..! உங்கள் மனம் ஒரு அலாவுதீனின் அற்புத விளக்கு.
அதனுள் இருக்கும் பூதம்... நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கும், பிரபஞ்ச மகாசக்தி.
பூதத்திடம் நீங்கள்... "வாழ வை என்றால்" வாழ வைக்கும்.
"வாய வை என்றால்" கண்டிப்பாய் வாயை வைத்துவிடும். :-)
வாழ வைக்கணுமா...? (அ) வாய வைக்கணுமாங்கறதை நீங்கதான் முடிவு பண்ணனும். :-)
நீங்கள் அற்புதங்களை நிகழ்த்தப் பிறந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு சின்ன ஹோம் ஒர்க்.
கூகுள் ஆண்டவரிடம் Law of Attraction என்று கேட்டுப் பாருங்கள்.
வரும் முடிவுகளில் முதல் 5 முடிவுகளை சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள்.
"நன்றி: "
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிலிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
Labels:
சுய முன்னேற்றம்,
தன்னம்பிக்கை,
நம்பிக்கையுடன்,
நல்லெண்ணங்கள்,
மனோசக்தி,
வெற்றியடைய
Subscribe to:
Post Comments (Atom)
Infolinks In Text Ads
Karnaa Full Video
எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....
A Letter to God...!
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,
"1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
5 comments:
really a very gud post
Now I've become a fan of LOA!!!
anbudan aruna
Its very very informative post, I am fan of Secret and law of attraction years before and I am glad someone is writing these things in Tamil. I only wish you more and more readership so many people can get the value of it - Neenga solra KiK ungalukku neraya kediakkattum :)
Dear Srivats,
Thanks for coming & commenting.
I want to write a lot, give a lot for the sake of the Humanity.
Typing with only my left hand pains.
Comments like your's give more energy to write more.
Definitely I will write a lot in this LOA topic.
Wishing you good health , wealth , abundance and divine grace at every step you take!
Post a Comment