இதைச் செய்து வருபவருடைய முன் அனுமதி இல்லாமலே... அதைப்பற்றி எழுத முடிவு பண்ணிட்டேன்.
முதல்ல இந்தக் கதையைப் படிங்க..!
----------------------------------------------------

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.
கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.
அவன் வெளியே வர முயற்சி செய்தான்.
ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.
சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.
சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.
அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.
சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.
இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.
“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும்.
ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.
--------------------------------------
கதை எப்பிடி..?
சூப்பருல்லா..? :-)
இது மாதிரி தினமும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு வரணுமா?
இந்த ரகசியச் சேவையைத்தான் நம்ம சகோதரர் "கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்" அவர்கள் ரொம்ப நாளா செஞ்சிட்டு வராரு.
குறிப்பு: நீங்களோ (அ) உங்கள் நண்பர்கள் எவரேனுமோ இந்த சேவையைய் பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை இவருக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org
"இங்க க்ளிக் பண்ணி, அவரோட வலைப்பூவுக்கு ஒரு விசிட் அடிங்க"
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிலிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"
2 comments:
நல்ல முயற்சி வாழ்த்துகள்!!
வெங்கடேஷ்
thiratti.com
தினமும் படிக்கிறேனே!!!!
அன்புடன் அருணா
Post a Comment