GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Saturday, September 13, 2008

அந்த 2 மந்திர வார்த்தைகள்



கனவு காணுங்கள்...!

அப்துல் கலாம் ஒற்றை வரியில் சொன்ன இந்த 2 மந்திர வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா?

அனுபவ பூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்.

ஏதாவது ஒரு விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த விருப்பம் நிறைவேறினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்.?

அது கிடைத்துவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள்.

அது பற்றிய சிந்தனையையே மனம் முழுக்க நிறைய விடுங்கள்.

கற்பனை செயுங்கள்.

கனவு காணுங்கள்.

அடிக்கடி கனவு காணுங்கள்.

உறங்கப் போகுமுன் உங்களின் கனவை நினைத்தபடியே...
உறங்கிப் போங்கள்!

----------------------------------------------------------------------------------

இந்தக் கனவு...
உங்களின் உள்ளுக்குள் செயலாற்றி
அதை நிறைவேற்றத் தேவையான உழைப்பை உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வரும்.

இந்தக் கனவு...
உங்களின் எண்ண அலைகளாக வெளிப்பட்டு,
பிரபஞ்சமெங்கும் பரவி...
உங்களின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புக்களை உங்களிடம் கொண்டு வரும்.

வந்த வாய்ப்புக்களை முழுமையாக உபயோகித்துக் கொண்டு,
கனவை நிறைவேற்றுவதற்காக....

முழு மூச்சாய் செயல்படுங்கள்.

----------------------------------------------------------------------------------

ஒரு நாள்....
நீங்கள் கண்ட கனவு...
ஸ்தூல வடிவில்...
உங்களுக்குச் சொந்தமாகியிருக்கும்.

----------------------------------------------------------------------------------

இந்தக் கனவை என்னால் அடைய முடியுமா?
அதற்கு...
எனக்குத் தகுதி இருக்கிறதா...?

என்றெல்லாம் யோசித்து...
உங்களின் உன்னதக் கனவை...
அவமானத்துக்குட்படுத்தி...
பலவீனமாக்கி விடாதீர்கள்.

----------------------------------------------------------------------------------

ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆசை,
ஏற்படுகிறதென்றால்....
அதை அடையும் தகுதி உங்களுக்கு ஏற்கெனவே இருப்பதால்தான்...
அந்த ஆசையே உங்களுக்கு வருகிறது
சொன்னவர் -எமர்சன்

----------------------------------------------------------------------------------

கனவு காண்பதற்கு உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஒரேயொரு வரைமுறை இது மட்டும் தான்.

உங்கள் கனவு ஆக்கபூர்வமானதாக இருக்கட்டும்.

அர்த்தமற்ற கனவுகளை பிரபஞ்ச மகாசக்தி ஆதரிப்பதில்லை.


அடுத்த முறை எவரேனும்...
"பகல் கனவு காணாதே!" என்று சொன்னால்...
மனதுக்குள் சிரித்துக் கொள்ளுங்கள்.

----------------------------------------------------------------------------------
இதோ கனவு காண்பது குறித்து மேலும், சிலப் பிரபலங்களின் வைர வார்த்தைகள்

Dream lofty dreams, and as you dream, so shall you become. Your vision is the promise of what you shall one day be; your ideal is the prophecy of what you shall at last unveil.
~ James Allen ~

You can dream it, you can do it.
~ Walt Disney ~

When you cease to dream you cease to live.
~ Malcolm S. Forbes ~

I always have to dream up there against the stars. If I don't dream I will make it, I won't even get close.
~ Henry J. Kaiser ~

To accomplish great things we must first dream, then visualize, then plan... believe... act!
~ Alfred A. Montapert ~

Big thinking precedes great achievement.
~ Wilfred Peterson ~

Thursday, September 11, 2008

கர்ணன் VS தருமர் (மனதைத் தொட்ட புராணக்கதைகள்.)



ஒரு முறை பாண்டவர்கள், தங்களில் மூத்தவரான தருமரையும் அவரது கொடைத் தன்மையையும், சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார்.

"தருமரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன்!" என்றார்.

"என்மேல் வருத்தப் பட வேண்டாம்.... நாளை நிரூபிக்கிறேன்!" என்றார்.

பொழுது விடிந்தது.

"என்னுடன் வாருங்கள்!" என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று...
இரண்டு தங்க மலைகளை உருவாக்கினார்.

பாண்டவர்களிடம் ஒரு மலையை ஒப்படைத்து...

"இன்று சூரியாஸ்தமனத்துக்குள் இந்த மலையை நீங்கள் முழுவதுமாக தானமளித்து விட வேண்டும்!" என்றார்."

"ப்பூ... இவ்வளவுதானா..?" என்று அனைவரும் சேர்ந்து சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு ஆளனுப்பி... அனைவரையும் வரச்செய்து...
அத்தனை பேருக்கும் சுமக்க முடியாத அளவு தங்கத்தை வெட்டி வெட்டி... கொடுக்கத் துவங்கினார்கள்.

போவோர், வருவோர் என் எவருக்கும் பாகு பாடின்றி... கூப்பிட்டு கூப்பிட்டு...
தங்க மலையை வெட்டிக் கொடுக்கின்றனர்.

பொழுதும் சாய்கிறது.

மலை கால்வாசிகூட கரைந்த பாடில்லை.

பொழுது சாய இன்னும் சில நிமிடங்களே பாக்கி.

தருமர் சோர்ந்து போய்ச் சொன்னார்.

"கிருஷ்ணா... தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்.

எங்களால் ஒரு மலையில் கால்வாசிகூட கொடுக்க முடியவில்லை."

அதுவரை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர்...

அங்கு வந்த கர்னனை அழைத்துச் சொன்னார்.

"கர்ணா..! இந்த இரண்டு தங்க மலைகளையும்,
பொழுது சாயவிருக்கும் இந்தச் சில நிமிடங்களில் உன்னால் எவருக்காவது கொடுக்க முடியுமா?"

"அதற்கென்ன கிருஷ்ணா!" என்று சொல்லி மலைகளின் அருகில் சென்றான் கர்ணன்.

காலை முதல் மாலை வரை ஓய்வின்றிக் கொடுத்தே கால் வாசிதான கொடுக்க முடிந்திருக்கிறது.

இவன் எப்படி சில நிமிடங்களில் தரப்போகிறான் என அனைவரும் நம்பிக்கையின்றி பார்த்துக்கொண்டிருக்க... நேரம் நகர்கிறது.

இன்னும் சூரியாஸ்தனமத்துக்கு ஒரே ஒரு நிமிடம்தான் மீதியிருக்கிது.

அந்த வழியாய் வந்த வழிபோக்கனை கர்ணன் கைதட்டி அழைத்தான்.

"இந்தா! இந்த இரண்டு மலைகளையும்... நீயே வைத்துக் கொள்!" என்று கொடுத்து விட்டுத் தன் அரண்மனை நோக்கிச் சென்றான்.

சூரியன் மறைந்தது.

கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

நான் ஓடிவரும் காட்சி YouTube-ல்



மார்புக்குக் கீழ் உணர்வின்றி, முடக்கப்பட்டவன்...
நகர முடியுமா?

நகர்வதோடு மட்டுமில்லை...

ஓடியும் வர முடியும்.

வீல்சேரில் உட்கார வைப்பதற்கு மட்டும்தான் பிறர் உதவி நாட வேண்டும்.

பிறகென்ன...?

ஒரு நிமிடம் ஒரு இடத்தில் நிற்கப் பிடிப்பதில்லை.

இப்போது நானே கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருகிறேன்.

ஆறு கிலோமீட்டர் பயணம் செய்து,
வங்கிக்குச் சென்று சம்பளப்பணம் எடுத்து வருகிறேன்.

அட.., நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்று வருகிறேன்.

ஊலலல்லா... பாட வேண்டும் போல் தோன்றுகிறது.

இந்த என் சந்தோஷத்தை, எனக்குக் கொடுத்த என் அன்புக் கர்ணர்களுக்கு,
கடவுள்களுக்கு....

இருதயத்தின் ஆழத்திலுருந்து...

நன்றி...
நன்றி...
நன்றிகள்...!

எனக்கு நீங்கள் புதிதாக கால்களையே அல்லவா, வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.

Tuesday, September 9, 2008

ராமரும் தேரையும்! (மனதைத் தொட்ட புராணக் கதைகள்! )



ராமர் வனவாசமிருந்தபோது...

ஒரு நாள் காலை நதியில் குளிக்க வேண்டி,
அம்பறாத் துணியை...
(முதுகில் கட்டிக் கொள்ளும் அம்புகள் நிறைந்த சிறு கூடை)
கழற்றி மணலில் ஒரு அம்பைச் சொருகி அதன் மீது அம்பறாத் துணி முதலியவைகளைச் சாய்த்து வைத்துவிட்டுச் செல்கிறார்.

குளித்து முடித்துவிட்டு வந்து மணலில் சொருகி இருந்த அம்பைப் பிடுங்குகிறார்.

ஓ..!

இதென்னக் கொடூரம்.?

அம்பின் நுனியில், உயிர் ஊசலாட்டத்தில் ஒரு தேரை.

துடித்து[ப் போகிறார் ராமர்.

"ஓ..! தேரையே!

நீ மணலுக்குள் இருப்பதை அறியாமல், தீயவர்களை மட்டுமே அழிக்கும், என் பாணம், இன்று அப்பாவியான உன்னை பலி வாங்கிவிட்டதே.

தயவு செய்து என்னை மன்னித்து விடு."

"பரவயில்லை ராமா! உன் கையால் சாவதே ஒரு பெரும் பாக்கியம்தான்," என்றது தேரை.

அப்போதும் மனம் ஆறவில்லை ராமருக்கு.

"என் அம்பு உன்னைத் துளைக்கும் போது...
ஒரு வார்த்தை...
ஒரே ஒரு வார்த்தை...
ராமா என்று என்னை அழைத்திருக்கக் கூடாதா?"

தேரை சொன்னதாம்.

"வேறு எவராவது என்னைக் கொல்ல வந்திருந்தால்..., 
நான் 'ராமா' என்று உன்னை அழைத்திருப்பேன்!

ஆனால்...

அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?"

Monday, September 8, 2008

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்..



எனக்குக்
கால்கள் முளைத்தன....
சக்கரமென்னும்
விரல்களுடன்.....

தெரிந்த பத்து முகங்கள்
தவிர பலப்பல
முகங்களின்
தரிசனம்......
தினமும்......

எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....

இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு
வண்ணத்துப் பூச்சியுடன்
சினேகம்.......

ஓ.....வாழ்க்கை
இவ்வளவு அழகானதா?

இப்புதிய சக்கரங்கள்
கற்பித்த அற்புதங்களை
அனுபவிக்க வித்திட்ட
அத்தனை
அன்புள்ளங்களையும்

கண்ணீர்ப் பளபளக்கும்...
விழிகளுடன்...
பெருமை பொங்க... நோக்கி...

எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........

சொற்களைத் தேடியலைந்து
தோற்றுப் போயின
என் உணர்வுகள்.....

வெறும் நன்றி
சொல்லித் தப்பிக்கப்
போவதில்லை.....

கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்........

ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....

மீண்டும் வாழ்கிறேன்
பதினோரு வயதிலிருந்து ஆரம்பித்து.........

ஆம்...

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.

இல்லையில்லை..!

சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியிருக்கிறேன்...!



[Valid Atom 1.0]

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.