
எனக்குக்
கால்கள் முளைத்தன....
சக்கரமென்னும்
விரல்களுடன்.....
தெரிந்த பத்து முகங்கள்
தவிர பலப்பல
முகங்களின்
தரிசனம்......
தினமும்......
எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....
இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு
வண்ணத்துப் பூச்சியுடன்
சினேகம்.......
ஓ.....வாழ்க்கை
இவ்வளவு அழகானதா?
இப்புதிய சக்கரங்கள்
கற்பித்த அற்புதங்களை
அனுபவிக்க வித்திட்ட
அத்தனை
அன்புள்ளங்களையும்
கண்ணீர்ப் பளபளக்கும்...
விழிகளுடன்...
பெருமை பொங்க... நோக்கி...
எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........
சொற்களைத் தேடியலைந்து
தோற்றுப் போயின
என் உணர்வுகள்.....
வெறும் நன்றி
சொல்லித் தப்பிக்கப்
போவதில்லை.....
கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்........
ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....
மீண்டும் வாழ்கிறேன்
பதினோரு வயதிலிருந்து ஆரம்பித்து.........
ஆம்...
நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.
இல்லையில்லை..!
சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியிருக்கிறேன்...!
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)

10 comments:
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
:)
உன் மகிழ்ச்சி என்றும் என்றும் என்றும் என் மகிழ்ச்சி அன்றோ!
அண்டத்தின் விளிம்பையே தொட்டு வா!
- அண்ணன்
உங்கள் கவிதையைக் கண்டுமிகவும் மகிழ்கிறேன் நண்பரே.
சிறகுகள் முளைத்திருக்கின்றன.
இனி வானத்தின் எல்லையை , வாழ்வின் வசீகர வண்ணங்களையெல்லாம் அழகிய விழிகளால் ரசித்துவரலாம்.
உங்கள் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே :)
//ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....//
இனிய மீள்பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
//எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........//
வேறென்ன வேண்டும்? கேட்க மிகச் சந்தோஷமாக இருக்கிறது..
அன்புடன் அருணா
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா.
வாழ்த்துக்கள்.
//எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....//
உங்களை நண்பனாகப் பெற அவற்றிற்கு இப்போதுதான் கொடுத்து வைத்திருக்கிறது.
உங்கள் சந்தோஷத்தில் எல்லோரும் பங்கு பெருகிறோம். வாழ்த்துக்கள் நண்பரே!
அந்தோணி
மறு பிறவி கொடுத்த இறைவனுக்கு நன்றி
வாழ்வினைத் தொடங்கு - எல்லாம் நல்ல படி நடக்கும்
நல்வாழ்த்துகள்
good one.
pls write about this.
//INVENTIONS
In 1998, I Invented a new sound system by Combining Music fundamentality & Electronics(similar & advanced than Dts).
You can feel music Dancing around you according to the Composing in my sound system.//
அருமையான கவிதை, வாழ்த்துக்கள் அந்தோணி முத்து.
Ungal kavidhai migavum azhagu!
melliya unarvugalai sirappaaga velippaduthi aagaaya malaiyil azhiyaamal sedhukki irukkireergal!
Kalam kanindhaal ungalai sandhippean!
Innum...innum...ezhudhungal nanbare!
YozenBalki.Blogspot.com
Chennai
Mobile:98400 42904
Post a Comment