
என் கண்ணீர்ச் சிறையில்...
சில கனவுகளுண்டு.!
கனவுகளுக்குச்...
சில நிறங்களுமுண்டு..!
சில பச்சை1
சில சிவப்பு!
சில நீலம்..
சில வெண்மை...
சில கனவுகள் கருப்பாகவும் வருவதுண்டு.
சிவப்பிலே சிதறடிக்கப் பட்டும்,
பச்சையில் பசுமையாகியும்...
நீலத்தில் வான் கடலாய் விரிந்துப் பரந்தும்...
வெண்மையில் தூய்மையடைந்தும்...
ஐயகோ..!
கடைசியில் கருமையில்...
கருகியும் போகிறேன்..!
இந்த நிறம்..
இப்போது வேண்டும் எனத் தெளியும்...
ஆற்றலும் எனக்கிலை..!
செய்வதறியாது...
மூச்சு முட்டி...
வியர்த்தொழுகி...
கலைந்தெழுகிறேன்...!
ஜன்ம ஜன்மங்களாய்த்...
துரத்தி வரும்...
இந்தக் கனவுகளினின்று...
மீளும்... தருணம்...
எப்போது வரும்...
என் இறைவா?
4 comments:
//கடைசியில் கருமையில்...
கருகியும் போகிறேன்..!
இந்த நிறம்..
இப்போது வேண்டும் எனத் தெளியும்...
ஆற்றலும் எனக்கிலை..!//
கருப்பு கருக்குவது என்ன்று யார் சொன்னது? கருமை வந்துவிட்டாலே இருள் வந்து விட்டது.....இருள் வந்தால் சூரியன் வரும் நேரம் அதிக தூரமில்லை....இதோ வந்தே விட்டது....இந்தக் கனவுகளில் இருந்து மீளும் தருணம்....ஒளிமயமான எதிர்காலம் இப்போது உன் கண்களில் தெரிய வேண்டும்..
அன்புடன் அருணா
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
அன்புடன் அருணா
//இந்தக் கனவுகளினின்று...//
யாரும் தப்பியதில்லை.
//மீளும்... தருணம்...
எப்போது வரும்...
என் இறைவா?//
இந்தக் கேள்விக்கும் எவருக்கும் விடை கிடைத்ததில்லை. ஆனால் அருணா சொன்னது போல கனவுகள் கலைந்த விழிக்கும் போது விடிந்துதானே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த விடியலுக்காகவே நாம் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறோம்.
//கடைசியில் கருமையில்...//
வானம் கருக்கையில்தான் பூமி செழிக்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்!
கண்ணீர் சிறையில் சில கனவுகள்
நிச்சயம் புன்னகைப் பூக்களாய் மலரும்,
தங்களின் தன்னம்பிக்கை, மற்றவர்களுக்கு
நல்வழிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
வாழ்த்துக்கள்..
முத்துசிவக்குமரன்,
muthusivakumarvpm@yahoo.co.in
Post a Comment