
ராமர் வனவாசமிருந்தபோது...
ஒரு நாள் காலை நதியில் குளிக்க வேண்டி,
அம்பறாத் துணியை...
(முதுகில் கட்டிக் கொள்ளும் அம்புகள் நிறைந்த சிறு கூடை)
கழற்றி மணலில் ஒரு அம்பைச் சொருகி அதன் மீது அம்பறாத் துணி முதலியவைகளைச் சாய்த்து வைத்துவிட்டுச் செல்கிறார்.
குளித்து முடித்துவிட்டு வந்து மணலில் சொருகி இருந்த அம்பைப் பிடுங்குகிறார்.
ஓ..!
இதென்னக் கொடூரம்.?
அம்பின் நுனியில், உயிர் ஊசலாட்டத்தில் ஒரு தேரை.
துடித்து[ப் போகிறார் ராமர்.
"ஓ..! தேரையே!
நீ மணலுக்குள் இருப்பதை அறியாமல், தீயவர்களை மட்டுமே அழிக்கும், என் பாணம், இன்று அப்பாவியான உன்னை பலி வாங்கிவிட்டதே.
தயவு செய்து என்னை மன்னித்து விடு."
"பரவயில்லை ராமா! உன் கையால் சாவதே ஒரு பெரும் பாக்கியம்தான்," என்றது தேரை.
அப்போதும் மனம் ஆறவில்லை ராமருக்கு.
"என் அம்பு உன்னைத் துளைக்கும் போது...
ஒரு வார்த்தை...
ஒரே ஒரு வார்த்தை...
ராமா என்று என்னை அழைத்திருக்கக் கூடாதா?"
தேரை சொன்னதாம்.
"வேறு எவராவது என்னைக் கொல்ல வந்திருந்தால்...,
நான் 'ராமா' என்று உன்னை அழைத்திருப்பேன்!
ஆனால்...
அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?"
5 comments:
ஏற்கெனவே கேட்ட கதை என்றாலும்....மீண்டும் படிக்க நன்றாக இருந்தது...
அன்புடன் அருணா
//அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?"//
தேரை சரியாகத்தான் கேட்டதோ? சில நேரங்களில் கடவுளின் சித்தமே இவ்வாறாக அமைந்து விடுகையில் யாரைத்தான் நோவது என்றாகி விடுகிறதுதான்.
அந்தோணி
சில சமயங்களில் கடவுளின் செயல்களுக்கே காரணம் புரியாது. என்ன செய்வது. தேரையின் நிலையில் இன்றும் பலர் இருக்கிறோம்.
vaazhkaiyin yadhaarthathai vunara oru vaaipu ungal ezhuthil kanden...iraivanidam vendugiren....ondrai yeduthu ondraik kodukkum nilai yendru maarumo?.....
anaithu kadhavugalum moodinaalum.....oru jannalil iurndhu ilam thendral mella nuzhaindhu manadhai varudumme......
thendral varum.....
natpodu,
jayashree shankar.
Post a Comment