ஆனால் இதனால் ஏற்பட்ட வலி 10 ஆண்டு ஆயினும் தீருமா தெரியவில்லை?
எனக்கு என் கண்ணீர்க் காலங்கள் நினைவுக்கு வருகிறது.
அப்போதெல்லாம் கடவுளிடம் நான் இப்படித்தான் வேண்டுவேன்.
"இறைவா! ஒன்று என் துன்பத்தை தீர்த்துவிடு..!
அல்லாது போனால் என் உயிரை தீர்த்து விடு..!
இரண்டில் ஒன்று...! எதுவாயினும் சரி..!
உடனடியாய்ச் செய்துவிடு..!"
என்று சுவற்றில் முட்டி மோதிக் கதறியழுவேன்.
நானாவது என் துன்பம் தீர்க்கத்தான் அழுதேன்.
இங்கே இவரோ...
"ஒன்று தூக்கிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!
இல்லாவிட்டால்...
விரைவில் என்னைத் தூக்கிலேற்றுங்கள்!"
வாழ்வோ? சாவோ? எதுவாயினும் உடனே கொடுங்கள்..!
என்று கெஞ்சுகிறார்.
கடவுளிடம் அல்ல..!
கடவுளுக்கு இணையான நமது "தமிழக முதல்வர் கருணாநிதி"-யிடம்!
கேட்டுவிட்டு...
தயவு செய்து...
ஆம்...
தயவுசெய்து... உங்களது கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள்!
உங்கள் கருத்துக்களை உலகறிய மார்தட்டி முழக்கமிடுங்கள்..!
உங்களது பணிவான வேண்டுகோளை தமிழக முதல்வருக்குத் தட்டி விடுங்கள்!
இயலுமானால் உங்கள் வலைப் பூவில் இது குறித்து, ஒரு பதிவிடுங்கள்!
இது விஷயத்தில்... ஆக்கபூர்வமாக, நீங்களோ, நானோ.. (அ) அனைவரும் கூட்டாக இணைந்தோ
ஏதேனும் செய்ய இயலுமா? என்று யோசியுங்கள்.
இவரது விதியை மாற்றியமைக்க உதவும் சிறு கருவியாய் நாம் இருக்கலாகாதா?
இவை எதுவுமே வேண்டாம்.!
குறைந்த பட்சம் உங்களது ஒரு வினாடிப் பிரார்த்தனையை...,
"பிரபஞ்ச மகா சக்திக்கு" அனுப்பி வையுங்கள்!
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு...
என் மனதின் ஆழத்திலிருந்து...
மனம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
|
5 comments:
அவரைபோல இன்னும் எத்தனையோ பேர் அரசியல் அநாதைகளாய் சிறையில் தவிக்கிறார்கள்.
தீவிரவாதிகளுக்கும், தேசதுரோகிகளுக்கும், வரிந்துகட்டி பேச ஆயிரம் அரசியல்வாதிகள் இருக்கிறாகள். ஆனால் சட்டத்தின் பிழையால் சிறைசென்ற அப்பாவிகள் மீது அரசியல்வாதிகளின் கருணை பார்வைபடாமை இந்த நாட்டின் அவலமே.
திருந்தத் தான் சிறை தண்டனை. ஆனால் குற்றங்கள் செய்யவே திட்டமிட்டு திரியும் கூட்டமோ சிறைக்கு சென்றால் அடுத்த நாளே ஜாமீனில் மீண்டும் அடுத்த குற்றத்திற்கும் தாயாராகிவிடுகிறது. எதோ ஒரு ஆத்திரத்தில் குற்றம்புரிந்து, சிறையில் திருந்தியவர்களுக்கோ காந்தி பிறந்தநாள் அல்லது அண்ணா பிறந்தநாள் அதுவும் அரசியல்வாதிகளின் அப்போதைய மனநிலையை பொருந்த பாக்கியம்.
திரும்ப திரும்ப திட்டமிட்டே குற்றம்செய்யும் கூட்டத்திற்கு நிச்சயம் மரணதண்டனை தேவை தான். அதேபோல சிறையில் திருந்தியபின்னரும் மேலும் சிறைதண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற சட்டத்திற்கும் மரணதண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அவர் குற்றமற்றவராகின் உடனடியாக விடுதலையாக வேண்டும். விடுதலையாகமாட்டோமா என்ற அவரின் ஏக்கத்தை விட காலம் போவதற்குள் பிள்ளை விடுதலையாகி வந்த ஒருநாள் கிடைக்காத என ஏங்கியிருக்கும் அந்த பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வது. மனம் கனக்கிறது.
//குறைந்த பட்சம் உங்களது ஒரு வினாடிப் பிரார்த்தனையை...,
"பிரபஞ்ச மகா சக்திக்கு" அனுப்பி வையுங்கள்//
என்ன சொல்வது?என்ன செய்வது?ஒன்றுமே முடியாத போது அந்தப் பிரபஞ்ச மஹா சக்தியைத் தானே நாடுவோம்......ஒரு வினாடிப் பிரார்த்தனையை பிரபஞ்ச மகா சக்திக்கு அனுப்பி வைத்து விட்டேன்.
அன்புடன் அருணா
http://azhagi.com/all/jana/jinspire.html பார்க்கவும்.
//என்ன சொல்வது?என்ன செய்வது?ஒன்றுமே முடியாத போது அந்தப் பிரபஞ்ச மஹா சக்தியைத் தானே நாடுவோம்......ஒரு வினாடிப் பிரார்த்தனையை பிரபஞ்ச மகா சக்திக்கு அனுப்பி வைத்து விட்டேன்.//
நானும்தான்...
அவருக்காக மட்டும் அல்ல, பிரபஞ்சச் சிறையில் இருக்கும் எல்லோருக்குமாய்..., எப்பொழுதும் போல்.
இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் நானும் இணைந்து கொண்டேன்.
Post a Comment