ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
-புறநானுறு
GIVE & RECEIVE FULL
Custom Search for Positive Anthony Muthu
Custom Search
Thursday, September 11, 2008
நான் ஓடிவரும் காட்சி YouTube-ல்
மார்புக்குக் கீழ் உணர்வின்றி, முடக்கப்பட்டவன்...
நகர முடியுமா?
நகர்வதோடு மட்டுமில்லை...
ஓடியும் வர முடியும்.
வீல்சேரில் உட்கார வைப்பதற்கு மட்டும்தான் பிறர் உதவி நாட வேண்டும்.
பிறகென்ன...?
ஒரு நிமிடம் ஒரு இடத்தில் நிற்கப் பிடிப்பதில்லை.
இப்போது நானே கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருகிறேன்.
ஆறு கிலோமீட்டர் பயணம் செய்து,
வங்கிக்குச் சென்று சம்பளப்பணம் எடுத்து வருகிறேன்.
அட.., நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்று வருகிறேன்.
ஊலலல்லா... பாட வேண்டும் போல் தோன்றுகிறது.
இந்த என் சந்தோஷத்தை, எனக்குக் கொடுத்த என் அன்புக் கர்ணர்களுக்கு,
கடவுள்களுக்கு....
இருதயத்தின் ஆழத்திலுருந்து...
நன்றி...
நன்றி...
நன்றிகள்...!
எனக்கு நீங்கள் புதிதாக கால்களையே அல்லவா, வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.
Labels:
சுய முன்னேற்றம்,
தன்னம்பிக்கை,
நல்லெண்ணங்கள்,
மனோசக்தி,
வெற்றியடைய
Subscribe to:
Post Comments (Atom)
Infolinks In Text Ads
Karnaa Full Video
எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....
A Letter to God...!
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,
"1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
7 comments:
அன்பு அந்தோணி அலுவலகத்தில் யுடுயூப் வராதென்றாலும்... உன் வார்த்தையிலேயே அத்தனை சந்தோசம் கண்டேன். இது என்றென்றும் பல்கிப் பெருகிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துக்கள் அந்தோணி.
திரும்பத் திரும்பப் பார்த்தேன். கண்களில் ஆனந்த கண்ணீரோடு பார்த்து மகிழ்ந்தேன். மிகவும் நிறைவாய் இருக்கிறது அண்ணா.
//ஊலலல்லா... பாட வேண்டும் போல் தோன்றுகிறது.//
பாடுங்க... பாடுங்க....It's time to enjoy your share of happiness.......
இந்த மகிழ்ச்சி என்றென்றும் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
இந்த மகிழ்ச்சி என்றென்றும் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
இளையகவி
very very happy to see you
மகிழ்வாக உணர்கிறேன்.
வாழ்த்துக்கள் அந்தோணி !
Post a Comment