GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Sunday, November 1, 2009

வித்தியாசமான வீடியோ...!வீடியோ பாத்து முடிச்சுட்டீங்களா?

முடிவில் எதிர்பாராத 'O'Henry twist அற்புதம்.

இது குறித்து என் மன நிலையை மேலே இந்த வலைப்பூ தலைப்புக்கு அடுத்தபடியான "விளக்கத்தில்" எழுதியுள்ளேன். (Description of this Blog)

கீழே படம் பாருங்கள் புரியும்.


ஆம்..!
புறநானூற்றில் எனக்கு மிகப் பிடித்த வரிகள் அவை.

"ஈயென இரத்தல் இழிந்தன்று- அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று"

"கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று- அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உய்ர்ந்தன்று!"

இந்த வரிகளுக்கு விஷுவல் பொழிப்புரை எழுதிய இந்தக் குறும்படமெடுத்தவருக்கு ஆயிரம் கோடி பாராட்டுக்கள்.

இங்கே....!

மிக நேர்மையுடன் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதுதான் நியாயத்திலும் மிகுந்த நியாயம்.

ஆம்..!
ஈயென இறந்திருக்கிறேன்.
ஈயேன் என இழிந்திருக்கிறேன்.


கொள்ளெனக் கொடுத்திருக்கிறேன்.
கொள்ளேன் என மறுத்திருக்கிறேன்.

"இறந்ததையும் இழிந்ததையும்" நினைக்கையில் வெறுமனே கையாலாகாத அழுகையும், மனம் முழுக்க வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சுகிறது.

"இங்கே "என் இனிய கர்ணா-வில் நான் எழுதியுள்ளதைப் போல்""

இப்படித்தான் சொல்லி என்னைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"என் இல்லாமையும், இயலாமையும்...
மட்டும் எனக்கு ஏற்படாமல் போயிருந்தால்..,.
இந்தக் காயங்களும் எனக்கு இல்லாமல் போயிருக்கும்."

என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்ள வைத்த வீடியோ! :-)


"வீடியோ கண்ட இடத்துக்கு நன்றி: "

பி. கு. 2: இப்போது முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ள, அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகி மென்பொருளுக்கு"இங்கே சொடுக்கவும்..."

8 comments:

ஆ.ஞானசேகரன் said...

//"என் இல்லாமையும், இயலாமையும்...
மட்டும் எனக்கு ஏற்படாமல் போயிருந்தால்..,.
இந்தக் காயங்களும் எனக்கு இல்லாமல் போயிருக்கும்."//

மனதை வலிக்க செய்கின்றது நண்பரே!!!

ராமலக்ஷ்மி said...

வித்தியாசமான வீடியோதான்.

இன்றும் வாழ்வோடு தொடர்ந்து எதிர்நீச்சலிட்டு வரும் உங்கள் உள்ளத்தின் உறுதி இக்காயங்களை ஆற்றிடட்டும்.

Anonymous said...

arumaiyaana video nga!! vaazhkaila etho oru nilaila ella manushanum ee ena erranthirukiraan, eeyen ena maruthirukiraan, ithu neenga varuthapadrathuku onnumey illa. Inniki neenga evlo peruku unthuthal-a irukireenga, inspiration-a irukreenga nu ungaluku theriyaathu.....palayavahalil irundhu katra paadam mattum pothum, athan ninaivukal vendam. be happy:)

Video was awesome. thanks for sharing.

PS: Don't know how to comment in tamil. that's y commenting like this

அன்புடன் அருணா said...

மனதை நெகிழ வைத்த வீடியோ& பதிவு Antony.

Srivats said...

Edha munnamey partha gyaabagam , very nice video. Ignorance of ability brings disablity very true Anna.

Naanum Giravum one rendu masathula chennai varuvom, ungala kandiappa pakka varuvom

Srivats said...

//Inniki neenga evlo peruku unthuthal-a irukireenga, inspiration-a irukreenga nu ungaluku theriyaathu//

correct savi

சி. கருணாகரசு said...

மிக சரியான எண்ணம்...மிக சரியான குறும்படம். மனதை சுட்டது! வியக்கிறேன் உங்களை!!

கல்யாணி சுரேஷ் said...

உங்களது தன்னம்பிக்கையை மிளிரச் செய்யும், எங்கள் தன்னம்பிக்கையை வளரச் செய்யும் பதிவு. நன்றி அண்ணா.

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.