உன்னைச் சுற்றியுள்ள பெருவயல்கள் உன்னை மதிக்காத போதும், அவற்றோடு கதைப்பதில் உனக்கு மிக ஆனந்தம்.
ஒரு நாள் வயல்களின் சொந்தக்காரர் சில ஆட்களுடன் வந்தார்.
மிகச் சரியாக உன்னைத் தேர்ந்தெடுத்து உன்னில் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.
உனக்கோ மகா துக்கம்.
உயிர் போகும் வலி.
பக்கத்துப் பெருவயல்கள், தமக்குள் பேசிக்கொண்டும், புன்னகைத்துக்கொண்டுமிருந்தன.
உன் உடலைக் குத்திக் கிழித்தபடி, காயத்தை ஆழமாக்கிக் கொண்டே, உனக்கு மிக வலியைத் தந்தார்கள் ஆட்கள்.
நீயோ கடைசி முயற்சியாக இறைவனை நோக்கி முறையிட்டாய்.
இறைவா...! என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏனிந்த நிலை? கதறினாய்.
கடவுள் சொன்னார்.
"சற்று பொறு..!"
உன் துக்கமும் துயரமும் அதிகமாகி வலியில் நீ பீறிட்டு அழத் துவங்கினாய்.
அற்புதம் நிகழ்ந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------
சில நாள் கழித்து இறைவன் உன்னோடு பேசினார்.
"இப்போது எப்படி இருக்கிறாய்?"
"சந்தோஷமாயிருக்கிறேன்.
என்னைச் சுற்றி உள்ள வயல்கள் இப்போது என்றும் பசுமையாய் செழிக்கின்றன.
என்னைச் சுற்றிலும் சோலைகள்.
நான் கொடுத்து வைத்த பிறவி.
இப்போது நான் பழைய சிறுவயல் அல்ல.
ஆழ்கிணறு!
என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் செழிக்க...
நான் துன்பப்பட்டது எனக்குக் கிடைத்த மாவரம்."
கடவுள் புன்னகைத்தார்!
இப்போதும் நீ அழுது கொண்டிருக்கிறாய்!
ஆனந்தத்தில்.
ஆனந்த அழுகையின் பிரவாகத்தில் சுற்றிலும் சந்தோஷமும் நம்பிக்கையும் விளைந்து கொண்டே போகிறது.
இது நிரந்தரம்.

6 comments:
//சுற்றிலும் சந்தோஷமும் நம்பிக்கையும் விளைந்து கொண்டே போகிறது.
இது நிரந்தரம்.//
அற்புதம் அந்தோணி முத்து. சிறுவயல வலி பொறுத்து ஆழ்கிணறாகி அடுத்தவரை வாழ வைத்துக் கொண்டிருப்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். என் வாழ்த்துக்கள்!
ஆகா அருமை...
vow!! Vidhyasamaana kannotam! Kalakreenga Antony!! Vaalthukkal!!
Adengappa!!
//சுற்றிலும் சந்தோஷமும் நம்பிக்கையும் விளைந்து கொண்டே போகிறது.
இது நிரந்தரம்.//
romba sari Anthony anna. Padamum adhukku thoda potrukeenga. romba inspiring. But ungalod comment box kandu pidikka dhaan kashtama pochu :)
ஆஹா....அருமை....பூங்கொத்து!
ராமலக்ஷ்மி said...
//அற்புதம் அந்தோணி முத்து. சிறுவயல வலி பொறுத்து ஆழ்கிணறாகி அடுத்தவரை வாழ வைத்துக் கொண்டிருப்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். என் வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
Post a Comment