GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Sunday, May 10, 2009

இன்று என் பிறந்த நாள்..! (வாழ்த்து சொல்ல வேண்டாம்பா..!)

படுக்கையில் விழுந்து...
26 வருஷம் முடிஞ்சு போச்சு.

1983-ஆம் வருடம் இதே மே 10-ஆம் தேதி,
11 வயதில் ஒரு கிணற்றருகில் விளையாடி,
தவறி விழுந்து,
Severe Spinal Cord injury.

இப்ப உங்க முன்னாடி தெரியற அந்தோணி முத்து-வோட தன்னம்பிக்கை,
நேர்மறைச் சிந்தனை,
எல்லாம் பிறந்த நாள் இன்று.

சரி. புடிங்க ஒரு கவுஜைய...!

என்னை விழுங்கிய கிணறு

நீரிருந்தால் நிலவை
விழுங்கியிருக்கும்

நீரில்லாததால் என்னை
விழுங்கியது

இதே நாள்
26 வருடம் முன்பு......

வீழ்ந்தும்...
எழுந்தும்...

அழுதும்...
தெளிந்தும்...

25 வருடங்கள்
ஓடி விட்டது!!

திரும்பிப் பார்க்கிறேன்...
சிரித்துக் கொள்கிறேன்..!

ஹா..! ஹா..! ஹா..!

இழந்தது எத்தனை??????????????????????
அடைந்தது எத்தனை????????????????????


ம்ம்ம்ம்...


நினைவலைகளை இழுத்துக்
கால்களை நனைக்கும்
கடலலைகள் போல.....

மீண்டும் ஒருநாள்......
ஞாபகங்களின் அணிவகுப்புகளோடு........
மிகச் சாதரணமாகக் கடந்து போனது!!!!!!
ஜனகணமன..!
-------------------------------------------

பதிவப்படிச்சுட்டு நல்லா இருந்திச்சுன்னா... பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயமில்லை பாஸ். ஜஸ்ட்... மேல தமிழ்மண கருவிப்பட்டைல கட்டைவிரல் மேல க்ளிக் பண்ணுங்க.(அதுக்காக பின்னூட்டமே வாணாம்-னு அர்த்தமில்லை. விரும்பினால் போடுங்க. சரியா..?)

இல்லாட்டி கீழ தமிலிஷ்'ல க்ளிக் பண்ணி ஓட்டுப் போடுங்க.

13 comments:

நிகழ்காலத்தில்... said...

நிறைய எழுதுங்க..

படிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்

வாழ்த்துக்கள்..

அப்துல்மாலிக் said...

மனது வலித்தது பட்ட கஷ்டங்களை நினைக்கும்போது.... படைத்தவன் மீதுள்ள நம்பிக்கையால மீண்டும் இன்று எங்கள் முன் நெஞ்சுநிமிர்ந்து.....

மெய்யாலுமே இதுதான் உண்மையான பிறந்த(மறுபிறவி‍) நாள்..

வாழ்க பல்லாண்டு ஆரோக்கியமான உடல் நலத்துடன்

அன்புடன் அருணா said...

இழந்தது பற்றிய கவலையை மறந்து
அடைந்ததை நினைத்து மகிழும் நேரமிது!!!!
Celebrate!!!
அன்புடன் அருணா

+Ve அந்தோணி முத்து said...

அறிவே தெய்வம் said...

//நிறைய எழுதுங்க..

படிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்

வாழ்த்துக்கள்..//

நிச்சயமாக. நிறைய எழுத ஆசைதான்.

மனம்,மூளை முழுக்க உபயோகமான பல்லாயிரம் பதிவுக்கான விஷயங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.

உதவியாளர் யாரவது கிடைத்தால் நலம்.

இடது கையினால் தட்டச்ச சிரமமாயிருக்கு.


வருகைக்கு நன்றி சகோதரரே..!

+Ve அந்தோணி முத்து said...

அபுஅஃப்ஸர் said...


//மனது வலித்தது பட்ட கஷ்டங்களை நினைக்கும்போது.... படைத்தவன் மீதுள்ள நம்பிக்கையால மீண்டும் இன்று எங்கள் முன் நெஞ்சுநிமிர்ந்து.....

மெய்யாலுமே இதுதான் உண்மையான பிறந்த(மறுபிறவி‍) நாள்..

வாழ்க பல்லாண்டு ஆரோக்கியமான உடல் நலத்துடன்//


வாழ்த்துக்கு நன்றி சகோதரரே.

நம்ம அருணாம்மா சொல்ற மாதிரி....

இழந்தது பற்றிய கவலையை மறந்து
அடைந்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

+Ve அந்தோணி முத்து said...

அன்புடன் அருணா said...

//இழந்தது பற்றிய கவலையை மறந்து
அடைந்ததை நினைத்து மகிழும் நேரமிது!!!!
Celebrate!!!
அன்புடன் அருணா//

வாவ்...! ரொம்ப நன்றி தெய்வமே..!

இந்தப் பதிவு மூலமா நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்.

+Ve அந்தோணி முத்து said...

இன்னிக்கி அம்புட்டுதான்.

sakthi said...

manasu valikuthunga anna

+Ve அந்தோணி முத்து said...

திகழ்மிளிர் said...

//வாழ்த்துகள்//

வாழ்த்துக்கு நன்றி... திகழ்மிளிர்...!

+Ve அந்தோணி முத்து said...

sakthi said...

//manasu valikuthunga anna//

அய்யே...! மனசு வலிக்கவா இம்புட்டு எழுதினேன்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது-ங்கற கீதாச்சாரத்தை கொஞ்சம் நினைச்சு பார்க்கணும் சக்தி.

கூட்டிக் கழித்து, என்னமாய்க் கணக்குப் போட்டுப் பார்த்தாலும்...

எல்லாம் நன்மைக்கே-ங்கிற விடை மட்டும்தான் வருது எனக்கு.

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்,
நன்றி சக்தி..!

goma said...

இறைவனின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் இருக்கும்.
உங்கள் கரங்களில் ,காவியம் படைக்க எழுதுகோல் தந்திருக்கிறார்.எழுதுங்கள் உங்கள் எழுத்து உங்களைத் தாங்கி நிற்கும்

+Ve அந்தோணி முத்து said...

goma said...

//இறைவனின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் இருக்கும்.
உங்கள் கரங்களில் ,காவியம் படைக்க எழுதுகோல் தந்திருக்கிறார்.எழுதுங்கள் உங்கள் எழுத்து உங்களைத் தாங்கி நிற்கும்//

நன்றி அக்கா..!

அதான பண்ணிட்டு வரோம்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் பாஸ்..

நிறைய நிறைவாய் எழுதுங்கள்...
காலம் கைக்கொடுக்கும்

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.