GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Wednesday, December 3, 2008

அன்றும் இன்றும்.............




அன்று
என் பொழுதுகள் வெறுமெனே
சுவற்றைப் பார்த்துக்
கழிந்துகொண்டிருந்தன....
இன்று
என் பொழுதுகள்
என் வேலைகளுக்கு 24 மணி
நேரம் போதவில்லையே என
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அன்று
என்னுடன் பேச கடவுள்
மட்டுமே தயாராயிருந்தார்.....
இன்று
என்னுடன் எப்போதும் பேச
சில அன்பு உள்ளங்கள்
தயாராகயிருக்கின்றன.....

அன்று என் தொலைபேசி
மணி அழைக்காதா என
ஏங்கிக் கொண்டிருந்தேன்....
இன்று
என் தொலைபேசி
மணியொலித்துக்
கொண்டேயிருக்கிறது...
அன்புள்ளங்களின்
அன்புத் தொல்லைகளால்

அன்று
என் தேவைகளுக்கும்
காசுக்காக அடுத்தவர்கள்
முகம் பார்த்திருந்தேன்...
இன்று
என் தேவைகளைக்
கவனித்துக் கொள்ளும்
அளவுக்குச் சம்பாதிக்கிறேன்

அன்று
வெளிக் காற்றைச் சுவாசிக்க
மாட்டேனா என்று தவம்
கிடந்திருக்கிறேன்.
இன்று
என் இரும்புக் குதிரையில்
சுதந்திரக் காற்றைச்
சுவாசித்துக் கொண்டே
ஊர்வலம் வருகிறேன்.....

சென்ற வருடம் இன்று (03-12-2008)
நான் ஆரம்பித்த வலைப்பூவும்
என்னை இந்த நிலைக்கு உயர்த்திய சில
காரணங்களுள் முக்கியமான ஒன்று.
கோடானு கோடி நன்றி!!!!

3 comments:

அன்புடன் அருணா said...

wow....ஒரு வருடம் ஆகிவிட்டதா???
வாழ்த்துக்கள் அந்தோணி!!!மென்மேலும் எழுதி உயர்வடைய வாழ்த்துக்கள்!
அன்புடன் அருணா

காஞ்சனை said...

என்றும் அன்பும், நேசமும் உள்ள உறவுகள் சூழ நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் நண்பா. வாழ்த்துக்கள் என்றென்றும்..

- ச‌காராதென்ற‌ல்

ராமலக்ஷ்மி said...

ஒரு வருட நிறைவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என்றும் இறைவனின் ஆசிகள் உங்களோடு இருக்க என் பிரார்த்தனைகள்.

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.