காலத்தை வீணடிக்க வேண்டுமா?
காதலித்துப் பாருங்கள்!
காதல்..!
அது புன்னகை வேஷம் கட்டி வரும்...
கண்ணீர்ச் சூனியக்காரியின்...
கொடூர சாபம்..!
அப்படியும்...
காதலித்துத்தான் தீர வேண்டுமா?
உங்கள் கடமையைக் காதலியுங்கள்!
அது உங்களை...
வாழ்வின் உச்சத்திற்குக் கூட்டிப் போகும்.
மனித மாண்பை...
காருண்யத்தை...
இல்லாதவருக்கு இரங்கும்...
இரக்கத்தைக் காதலியுங்கள்!
இவை நீங்கள் மண்ணில் வாழும்போதே...
உங்களைப் புனிதனாக்கும்...!
இவ்வளவு சொல்லியும்...
புத்தி வரவில்லையா?
முதல் வரியிலிருந்து...
மீண்டும் படியுங்கள்!!!
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
-புறநானுறு
GIVE & RECEIVE FULL
Custom Search for Positive Anthony Muthu
Custom Search
Tuesday, October 7, 2008
காதலிப்பவர்களின் கவனத்திற்கு...!
Labels:
சுய முன்னேற்றம்,
தன்னம்பிக்கை,
நல்லெண்ணங்கள்,
மனோசக்தி,
வெற்றியடைய
Subscribe to:
Post Comments (Atom)
Infolinks In Text Ads
Karnaa Full Video
எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....
A Letter to God...!
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,
"1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
7 comments:
ஆஹா யார்மேல இந்த கொலைவெறி???
அந்தோணி என்னப்பா ஆச்சு ? ஏன் மென்மையான காதலின் மீது இவ்வளவு வெறுப்பு ? உனக்கும் ஒரு தேவதை வருவாள் - அன்பினைப் பொழிவாள் - ஆறுதல் கூறுவாள் - இயல்பாக இருப்பாள் - கவலையை மறக்கடிப்பாள்
நல்வாழ்த்துகள்
//உங்கள் கடமையைக் காதலியுங்கள்!
அது உங்களை...
வாழ்வின் உச்சத்திற்குக் கூட்டிப் போகும்.//
இது புரியாமல்தானே பல பேர் தங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.....
அன்புடன் அருணா
்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஸப்பாபாபாபாபா!!!!
//
உங்கள் கடமையைக் காதலியுங்கள்!
அது உங்களை...
வாழ்வின் உச்சத்திற்குக் கூட்டிப் போகும்.
மனித மாண்பை...
காருண்யத்தை...
இல்லாதவருக்கு இரங்கும்...
இரக்கத்தைக் காதலியுங்கள்!
இவை நீங்கள் மண்ணில் வாழும்போதே...
உங்களைப் புனிதனாக்கும்...!
//
மிகவும் அருமை அந்தோணி. வாழ்க வளமுடன்!
இவன் said...
//ஆஹா யார்மேல இந்த கொலைவெறி???//
யார் மீதும் இல்லை இவன்.
என்னவோ தெரியலை.
காதல் என்றாலே, ஏதோ தேவையற்ற ஒன்றில், மனிதன் தன் சக்தி முழுக்க வீணடித்துக் கொண்டு வாழ்வதாக எனக்குத் தோன்றும்.
எனக்குச் சரியாகத் தோன்றுவது, எல்லாருக்கும் சரியாக இருக்க வேண்டுமெனக் கட்டாயமில்லையென்பதை உணர்கிறேன்.
cheena (சீனா) said...
//அந்தோணி என்னப்பா ஆச்சு ? ஏன் மென்மையான காதலின் மீது இவ்வளவு வெறுப்பு ? உனக்கும் ஒரு தேவதை வருவாள் - அன்பினைப் பொழிவாள் - ஆறுதல் கூறுவாள் - இயல்பாக இருப்பாள் - கவலையை மறக்கடிப்பாள்
நல்வாழ்த்துகள்//
அப்பா,
என்னவோ தெரியவில்லை?
கண்ணீர் முட்டுகிறது.
எனக்கும் ஒரு காலத்தில் தேவதைக் கனவு இருந்தது.
அது பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட எனக்குத் தகுதி இல்லையென, காலம் என் முகத்திலறைந்து சொல்லிக் கொடுத்திருக்கிறது.
தேவதைக் கனவுகளை, மனத்திலிருந்து முழுமையாக அழித்துவிட்டு,
இப்போது என் கடமையைத்தான் முழுமையாகக் காதலிக்கிறேன்.
ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னித்து விடுங்கள் அப்பா.
Post a Comment