ஏதேதோ உதாரணம் சொல்லியும் மகனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
"என்னுடன் வா" என அழைத்துக் கொண்டு போனார்.
வெகுதூரம் சென்ற பின், ஓரிடத்தில் நிறுத்தி... சுற்றிலும் தரையை சுட்டிக் காட்டினார்.
ஏதோ தீ விபத்தினால் தரை முழுவதும் கருகிப் போயிருந்தது.
குனிந்து தரை முழுவதும் உன்னிப்பாய்த் தேடினார்.
திடீரென்று முகம் பிரகாசமானார்.
"மகனே! வா! என்ன பார்க்கிறாய்?"
"சுற்றிலும் கருகிய மொட்டாந்தரை!"
"பிறகு?"
"நடுவில்... முளைத்திருக்கும் ஒற்றைப் புல்! ஆ... அப்பா! புரிந்து விட்டது! இதுதான் வீரம்."
"சபாஷ்!"
==========================================================
ஆம்! இயல்பு நிலை முடக்கப் பட்டு, அங்கே எழும் போராட்டத்தின், தன் முனைப்பின், சுயம் அறிதலின்... விளைவுதான் வீரம்.
அந்த வகையில்...
பிறந்த 19 மாதங்களில்... கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தும்., வாழ்ந்து காட்டிய "ஹெலென் கெல்லர் (Click here)" ஒரு மாவீரர்.

21 வயதில் நரம்புக் கோளாறினால் பாதிக்கப் பட்டும், கழுத்துக்குக் கீழ் செயலிழந்து, பேச்சிழந்த நிலையிலும், கடும் முயற்சியுடன் தொடர்ந்து படித்து, விஞ்ஞானியாகி, 'சர் ஐசக் நியூட்டன்' வகித்த பதவியை வகித்த விஞ்ஞானி "ஸ்டீவன் ஹாக்கின்ஸ் (Click here)" ஒரு மாவீரர்.

கைகளை இழந்தாலும், வாயினால் வரைந்து சாதிக்கும் ஓவியர்.. "ஜனா (Click here)"-வும்,

கால்களால் வரையும் "நரசிம்மலு-வும் (Click here)" மாவீரர்கள்.

இன்னும் நம்மைச் சுற்றிலும், எத்தனை எத்தனையோ மாவீரர்கள்... அறியப்படாமல், சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் இந்த நாளில் நம் வீரவணக்கத்தையும், மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.
==========================================================
தயவு செய்து இவர்களுடன் என்னை, யாரும் ஒப்பிட வேண்டாம்.
நிஜத்தில் நான் இவர்களின் மிச்சத்தின் எச்சத்துடன் கூட ஒப்பிடப்படத் தகுதியற்றவன்.
என் ஓட்டம், எலியை பூனை துரத்தும்போது எலி ஓடும் ஓட்டம்.
இதையும் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் ஓட்டத்தையும் ஒப்பிடுவது மாபெரும் தவறு.
திறமையினாலும் இடைவிடாத பயிற்சியினாலும் சாதித்தவர்கள் இவர்கள்.
இவர்கள் முன்பு நானொரு வெற்றுப் பிம்பம்.
==========================================================
சமீபமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.
கடும் ஆஸ்துமா மூச்சுத் திணறலில், 15 நாட்கள் படுத்த படுக்கையாகி, இடையில் சில நாட்கள் கொஞ்சம் சரியாகி..., இப்போது மீண்டும் கடுமையாகி படுக்க வைத்துவிட்டது.
தூக்கம் வராத நிலையில், மிகுந்த சிரமத்துடன், ஏதோ அரை மயக்க நிலையில் தட்டச்சிக் கொண்டு....
தட்டுத் தடுமாறி... வாழ்வில் இன்னும் கொஞ்ச தூரம் போக நினைக்கிறேன்.
உடலார் ஒத்துழைப்பாரா........?
தெரியவில்லை?
==========================================================
வீரர்கள் என்றால் இவர்கள் மட்டுமல்ல.
வாழ்வின் அடிமட்டத்திலிருந்து,
வறுமையின் கொடுமையிலிருந்தாலும், இடைவிடாத போராட்டங்களுக்கிடையே இன்று உயர்ந்து நிற்கும் நமது முதல்வர் கருணாநிதி, என் முதலாளி மதுரா ட்ராவல்ஸ் அதிபர், "கலைமாமணி வி. கே. டி. பாலன் (Click here)", அன்பான அப்துல் கலாம் மாமா .... இன்னும்... இன்னும்... இந்தப்பட்டியல் முடிவடையவில்லை.
உங்கள் இப்போதைய நிலை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.
மனம் வைத்தால் நீங்களும் மாவீரராகலாம்.

1 comment:
ஐம்புலன்களும் அவயங்களும் அப்பளுக்கற்ரு இருந்தாலும் சோம்பிக் கிடப்பவர்களை விட கோழைகள் யாரும் இருக்க முடியாது
அருமையான பதிவு.
உண்மையான வீரத்தை அழகாக அனைவர் மனதிலும் உங்கள் பதிவின் மூலம் பதிய வைத்து விட்டீர்கள்
Post a Comment