GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Friday, November 14, 2008

பிரபஞ்சத்தைக் காப்பாற்றுங்கள்.........

புரியப் படாத பிரபஞ்சத்தின்
இயக்கத்தின் ஒரு புள்ளியான
நமக்கு பிரபஞ்சத்தைக்
காப்பாற்றும் வேலை......??

களைத்துக் கிடந்தவன் வந்து
இளைப்பாறத் தோள் எனும்
களம் கொடுத்துக் கனிவுடன்
களைப்பாற்றுங்கள்

மணல் எடுத்து
மணல் கொடுத்துப்
போவதைத் தவிர
வேறொன்றறியேன்
எனும் கடல் அலை
போல அன்பு செய்யுங்கள்

சுவர்கள் நடுவில் வாழும்
மனங்களை சுவர் உடைத்து
வெளிக் கொணரும்
சூழ்ச்சிகளைக்
கண்டு பிடியுங்கள்

மூச்சு விட முடியாத
கண்ணாடிக் குடுவைக்குள்
மாட்டிக் கொண்ட மீன்களை
விழுங்கும் மீன்களாய்.....
மனிதர்களைத் தின்னும்
மனிதர்களாய் மாறிக் கொண்டிருக்கும்
மனிதர்களை மீன் உருவிலிருந்தும்
கண்ணாடிக் குடுவையிலிருந்தும்
வெளிக் கொணருங்கள்

எதைத் தொலைப்போம்
அடுத்தது எனத் தெரியாமலே
ஒவ்வொன்றாய்த்தொலைத்து
முகம் தொலைத்து முழுதாய்த்
தொலைந்து போகும் முன்
மனிதம் காப்போம்....

மனத் திருப்தி மகத்தான பலம்.
அது கொண்டு ஊற்றெடுக்கும்
அளவிலாச் மனச்சக்தியைப் பெருக்குங்கள்
அனல் சக்தி பெறுங்கள்

வைக்கும் வெடிகுண்டுகள் பூக்காடாகும்
வித்தை கண்டு பிடியுங்கள்
தேசம் தொலைத்த மக்கள்
உலகம் தொலைக்கும் முன்
கண்டு பிடியுங்கள்
முயன்றால் முடியாதது இல்லை

பிரபஞ்சத்தின் கோடி நட்சத்திரங்களின்
முதல் ஒளித்துகள்
எங்கிருந்து புறப்பட்டது
பயமில்லாமல்?
முயன்றால் முடியாதது இல்லை

வீழும் விழுதுகளுக்குத் தெரியாது
மரம் தாங்குவது அதுவென்று.....
அப்படித் தாங்குங்கள் பிரபஞ்சத்தைத்
தன்னம்பிக்கையென்னும் விழுது கொண்டு....
முயன்றால் முடியாதது இல்லை

11 comments:

Bee'morgan said...

//
மூச்சு விட முடியாத
கண்ணாடிக் குடுவைக்குள்
மாட்டிக் கொண்ட மீன்களை
விழுங்கும் மீன்களாய்.....
//
அற்புதம்..! பொருத்தமான உவமைகள் கொண்டு அழகா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துகள்.. :)

அன்புடன் அருணா said...

//அற்புதம்..! பொருத்தமான உவமைகள் கொண்டு அழகா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துகள்.. :)//

அப்பிடியா? Bee'morgan ....உங்க பேர் புதுசா இருக்கிறது.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
அன்புடன் அருணா

Sanjai Gandhi said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குக்கா.. குறிபிட்டு சொல்ல சில வரிகள் மட்டுமில்லாம எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..:)

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai said...
//கவிதை ரொம்ப நல்லா இருக்குக்கா.. குறிப்பிட்டு சொல்ல சில வரிகள் மட்டுமில்லாம எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..:)//

அப்பிடியா சஞ்செய்....Tank U...Tank U...
அன்புடன் அருணா

நாடோடி இலக்கியன் said...

nalla sinthanai valam.
vaazhthukkal.

மதிபாலா said...

வைக்கும் வெடிகுண்டுகள் பூக்காடாகும்
வித்தை கண்டு பிடியுங்கள்
தேசம் தொலைத்த மக்கள்
உலகம் தொலைக்கும் முன்
கண்டு பிடியுங்கள்
முயன்றால் முடியாதது இல்லை

பிரபஞ்சத்தின் கோடி நட்சத்திரங்களின்
முதல் ஒளித்துகள்
எங்கிருந்து புறப்பட்டது
பயமில்லாமல்?
முயன்றால் முடியாதது இல்லை//

அருமை அருணா..

நன்றாக இருக்கிறது..

வாழ்த்துக்கள் , மென்மேலும் எழுதுக..

கபீஷ் said...

ரொம்ப ரொம்ப அருமையான கவிதை!
ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு

அன்புடன் அருணா said...

நாடோடி இலக்கியன் said...
//nalla sinthanai valam.
vaazhthukkal.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...நாடோடி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

மதிபாலா said...
//அருமை அருணா..
நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் , மென்மேலும் எழுதுக..//

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி மதிபாலா.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கபீஷ் said...
//ரொம்ப ரொம்ப அருமையான கவிதை!
ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு//

அப்பிடியா கபீஷ்??
ரொம்ப நன்றி.
அன்புடன் அருணா

+Ve அந்தோணி முத்து said...

ஒவ்வொரு வரியும் அற்புதம்.

பிடித்த வரிகள் என்று பார்த்தால்...

"கவிதை முழுமையுமே" இங்கு போட வேண்டியிருக்கும்.

வாழ்த்துக்கள்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.